பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை: சிசிடிவி காட்சி ஷாக்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருநெல்வேலியில் ஜால் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இங்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த மாதம் 25-ம் தேதி காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் மாணவர்களை பிரம்பால் அடித்து சராமாரி தாக்கியுள்ளார். இதில் சில மாணவர்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அவர்கள் வெளியே தெரிவிக்கவில்லை. இதுபோல் இப்பயிற்சி மையத்துக்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணிகளை விட்டுவிட்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 இதற்கென காலணிகளை அடுக்கி வைக்க பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு காலணியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக, கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து இந்த காலனி யாருடையது என ஆசிரியர் கேட்க, என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன் அந்த மாணவி மீது காலனியை தூக்கி வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்தது.

Related Posts