அனுர பலம் இல்லாத ஜனாதிபதி - ரணில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தனக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் பெரும்பான்மை பலம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீர்கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.

தோல்வியடைந்துவிட்டால் வீட்டிலேயே இருங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியதாக தெரிவித்த  ரணில் விக்கிரமசிங்க, பெரும்பான்மையான மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார்.

"பெரும்பான்மை எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் நான் தோற்றேன்.  அவருக்கும் பெரும்பான்மை வழங்கப்படவில்லை. அதனால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? நான், பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி, அனுர பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி அவ்வளவுதான்,

புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு தேசிய பேரவையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உங்களை போன்று எனக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றார். (P)

கனடாவில் பல்பொருள் அங்காடியில் இந்திய இளம்பெண் மரணம் | Thedipaar News

Related Posts