வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட நாடாளுமன்ற தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 7மற்றும் 8ம் திகதிகளிலும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. (P)

லைக்காவால் எல்லோரையும் வாங்க முடியும் என்றால், எதற்கு அரசாங்கம்! ; வீ ஆனந்தசங்கரி | Thedipaar News

Related Posts