அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிட்டால் நாடு கொத்தலாவல பல்கலைக்கழக பஸ் போன்று விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றுக்கு , 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி சீரழித்த அனுபவசாலிகள் என்று அழைக்கப்படுபவர்களை இனி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தி (NPP) பதிலளித்துள்ளது.
பதுளையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய NPP உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மக்களுடன் சிறந்த உறவை அமைக்க , மக்கள் NPP க்கு மாத்திரமே மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.
“அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் சொல்வதைக் கேட்டேன். சாரதியின் தவறினால் ஏற்பட்ட விபத்தைப் போன்று அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகாவிட்டால் நாடு KDU பேருந்தைப் போல் நொருங்கும் என ரணில் சொன்னதைக் கேட்டேன்.
ஆம் அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது. 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி, நாட்டையே சீரழித்து திவாலாக்கினர். நாட்டைத் திவாலாக்கிய அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் இனி அதிகாரத்தைக் கொடுக்க மாட்டார்கள்,'' என்றார்.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரயிறுதியில் நடைபெற்ற மாநாட்டில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த - பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என தெரிவித்தார். (P)