இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பண்ட வரி நீடிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது


இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது.


அதன் செல்லுபடியாகும் காலம் 2024 நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (P)


Related Posts