காலி முகத்திடல் தொடர்பில் புதிய தீர்மானம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காலி முகத்திடலை மத நடவடிக்கைகள் அனைத்து விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு என உரிய வரைமுறைகளுக்கு உள்ளமைவாக இடஒதுக்கீடு செய்வதை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


காலி முகத்திடலில் சமய நிகழ்வுகளை மட்டும் நடாத்த அனுமதி வழங்குவதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை புதிய அரசாங்கம் மாற்றியுள்ளது.


காலி முகத்திடலில் 2022ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விரட்டியடித்த அரகலய போராட்டம் இடம்பெற்றது.


அமைச்சரவை தீர்மானத்தின்படி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனமான ஸ்ரீலங்கா துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலி முகத்திடல் மத நோக்கங்களுக்காக அன்றி வேறு நோக்கத்திற்காக அனுமதி வழங்கப்பட மாட்டாது.


காலி முகத்திடலின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்காக அண்ணளவாக ரூ.2.5–3.0 மில்லியன் செலவழிக்க வேண்டியுள்ளது, மேலும் காலி முகத்திடலை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான இடமாக பயன்படுத்தப்பட வேண்டுமென்பதுடன், 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பொருத்தமான அளவுகோல்களுக்கு அமைய மக்கள் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஏதுவான இடமாக பராமரிக்க வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


“தூய்மையான மற்றும் பசுமையான காலி முகத்திடல்” என்ற கருத்தின் அடிப்படையில் காலி முகத்திடலின் நிர்வாகத்தை மேலும் முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பேணத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த அங்கீகாரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (P)

Related Posts