தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இது குறித்து விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் அனைத்தும் திங்கட்கிழமை  நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. ஊடகங்கள் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது. அதன் பிறகு தேர்தல் தினம் வரை மௌன காலமாகும்.

மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை அகற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். (P)


Related Posts