தாடியால் வந்த வம்பு! ஒரே கடிதம் ஒட்டு மொத்த மாநிலமே சைலன்ட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். காஷ்மீரி மாணவர்கள் வகுப்புகளிலும் மருத்துவ பணிகளிலும் பங்கேற்க தாடி மிகக் குறைவாகவே இருக்க வேண்டும் அல்லது முழுமையாக ஷேவ் செய்ய வேண்டும் என நிர்வாகம் கூறியது. தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு அப்சென்ட் போடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, கல்லூரியின் உத்தரவு மத உரிமைகளை மீறுவதாக தெரிவித்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கல்லூரி நிர்வாகம் மாணவர்களுடன் கலந்துரையாடி, தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று உறுதியளித்துள்ளது.

Related Posts