2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபாலில் விநியோகிக்கும் பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்களுக்கு பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் வசதி செய்யப்பட்டுள்ளது. (P)