இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: பாம்பன் பாலத்தில் மறியல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12-ல் பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தனர். இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப்படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தன.

Related Posts