ரொறன்ரோவில் Queen and Dufferin பகுதி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சுமார் நூறு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட தாக கூறப்படும் 16 துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இசை பதிவு கூடம் ஒன்றிற்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட வாகனம் ஒன்றில் அந்த இடத்திற்கு சென்ற சிலர் வெளியே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு கும்பல் தொடர்பான மோதலாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணை நடந்து வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினர்.
வெற்றிவாகை சூடிய துரைராசா ரவிகரன் ; வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்| Thedipaar News