இனி மூன்று குழந்தைகள் இருந்தால் தான் தேர்தலில் களமிறங்க முடியுமாம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆந்திர மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடை ஊக்குவிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகள் வரை இருப்பவர்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் எனவும் அதற்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது எனவும் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் ஆந்திராவில் குறைந்து வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதை அடுத்து தற்போது அந்த கட்டுப்பாட்டை நீக்கி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தில் 1.5% வரை குறைந்துள்ளதால் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சமீபத்தில் கூட 3 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு தான் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

Related Posts