மதுரையில் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் நடிகையும் அந்தக் கட்சியின் மகளிர் அணி துணை செயலாளருமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சமூக நீதி என்று பேசி வரும் திமுக சிறுபான்மையினருக்காக என்ன செய்துள்ளது??தற்போது விவாத மேடையில் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை சென்றுள்ளது. நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன? திருமண வீடியோவை விற்பனை செய்து சம்பாதித்தால் என்ன? தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? அதோடு தனுஷ் நயன்தாரா சண்டை என்பது திமுகவின் திசை திருப்பும் வேலை என்று கூறினார். மேலும் முன்னதாக நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி கொடுக்காததோடு 3 நிமிட காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதன் காரணமாக தனுஷ் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்ற சாட்டுகளை சுமத்தி நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். மேலும் இது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படும் நிலையில் இந்த விவகாரமே திமுக அரசின் திசை திருப்பும் வேலை தான் என்று காயத்ரி ரகுராம் புது குண்டை தூக்கி போட்டுள்ளார்.