காற்று மாசு உச்சம்: ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவருகிறது.

 எனினும், முக்கிய நகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. லாகூரில் காற்று தரக் குறியீடு 1000-த்தை தாண்டியுள்ளது. சமீபத்தில் முல்டானில் காற்று தரக் குறியீடு 2,000-த் தாண்டியது.

Related Posts