ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாகக் கிடந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் 19 வயதான குர்சிம்ரன் கௌர் என்ற 19 வயது பெண், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் நிலையில், அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்றும், விசாரணை முடிவுக்கு வந்திருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
அதுபோல, இந்த வழக்கில், மக்களின் கவனமும் இருக்கிறது என்பதையும், பதில் சொல்ல முடியாத சில கேள்விகள் இருப்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1858558091580620892
இதற்கிடையே, இந்திப் பெண் சடலமாகக் கிடந்த ஓவனில், ஒருவர் விபத்தாகவோ, அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடனே, தன்னைத் தானே பூட்டிக்கொள்ள முடியாது என்கிறார் பல்பொருள் அங்காடி பெண் ஊழியர் ஒருவர்.அவர எந்த அளவுக்கு பலம்கொண்டவராக இருந்தாலும், தன்னைத்தானே இந்த ஓவனில் வைத்து பூட்டிக்கொள்ள இயலாது என்று அங்கே பணியாற்றும் பெண் ஊழியர் விடியோவுடன் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவும் வைரலாகி வருகிறது.அதில், வெளியிலிருந்து பூட்டும் அமைப்பையும், உள்ளே இருந்து பூட்டலாம், ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்பதையும் விளக்கியிருக்கிறார்.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1849775335757197569