அஜித் வீட்டில் விஷேசம்! வைரல் புகைப்படம் உள்ளே!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி படங்களில் நடிப்பதில்லை என்றாலும் புகழின் உச்சியில் தான் இருக்கிறார். காரணம் முன்னர் இவர் நடித்த படங்கள் மட்டுமில்லை அஜித்தின் மனைவி என்ற அந்தஸ்தும் தான். இன்றும் இந்த தம்பதிகள் தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களது காதல் தான். அஜித் பலருக்கு உதவி செய்து வருகிறார் என்பது அங்கங்கு சினிமா துறையில் உள்ளவர்கள் கிசுகிசுக்கும் ஒரு விஷயம் தான். ஏன் கிசுகிசு என சொல்லவேண்டும் என்றால் அஜித் செய்யும் உதவிகள் எப்போதும் ரகசியமாகவே இருக்கும் வெளிப்படையாக கூறிக்கொள்ளமாட்டார். இவரால் பயன் அடைந்தவர்கள் மட்டுமே எப்போதாவது சொல்ல வாய்ப்புண்டு. சினிமாவில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி, குழந்தைகளுக்கு படிப்பு உதவி, மருத்துவ உதவி என இப்படி இவர் பல உதவிகள் செய்ய காரணம் இவரது மனைவி ஷாலினி தான். 

 ஆம்! மனைவியின் சம்மதம் இல்லாமல் அஜித் பலருக்கும் பல உதவிகளை செய்ய முடியுமா? முக்கியமாக சொல்லப்போனால் இந்த உதவிகளுக்கு சரியான வழிகாட்டலே ஷாலினி என்று தான் சொல்லப்படுகிறது. அந்த ஷாலினிக்கு நேற்று நவம்பர் 20 பிறந்தநாள் என்பதால் அதை குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், தங்கை ஷாம்லி, சகோதரர் ரிச்சர்ட் என நால்வரும் நான்கு விதமான கேக் அவருக்காக கொண்டு வந்திருக்கின்றனர். அஜித் மட்டும் இந்த புகைப்படத்தில் இடம்பிடிக்கவில்லை. மற்றபடி அஜித் என்னதான் ஹிட் படங்களை கொடுத்தாலும் சரி கொடுக்கவில்லை என்றாலும் சரி அஜித் பற்றிய சின்ன விஷயமும் இணையத்தில் வைரலாகும் அப்படித்தான் இப்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Related Posts