நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக ரிலீஸ் செய்து இருக்கின்றனர். இதற்காக நயன்தாரா பல கோடிகளை விளைப்பயனாக பெற்றுள்ளார். அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகிய நிலையில், இரண்டு வருடமாக அவர் அதை தராமல் மறுத்து வந்திருக்கிறார். இந்த படத்திற்கு தனுஷ் தான் தயாரிப்பாளர். தற்சமயம் அந்த வீடியோ தரவேண்டும் என்றால், 10 கோடி வேண்டும் என தனுஷ் கேட்டுள்ளார்.
அதை குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட கடிதம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நயன்தாராவுக்கு எதிராக அதிகமான கருத்துக்களை இணையத்தில் பார்க்கமுடிகிறது. நயன்தாரா வியாபாரம் நோக்கம் கருதி வீடியோக்களை விற்கும் போது, விற்கும் நோக்கத்தில் தானே தனுஷ் வசம் இருக்கும் வீடியோக்களை கேட்கிறார்கள்? இவர்கள் வியாபாரியாக இருக்கலாம்? ஆனால் இவர்கள் உடன் உள்ளவர்கள் வியாபார நோக்கம் கொண்டவர்களாக இருக்க கூடாதா? தனுஷ் வசம் இருக்கும் வீடியோவை மீண்டும் விற்க தானே போகிறார்கள்? இலவசமாக ரசிகர்களுக்காக யூடியூபில் போட போகிறார்களா? அப்படி என்றால் தனுஷ் பங்கு பணம் கேட்பதில் என்ன தவறு? இந்த நிலையில், Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகிவிட்ட நிலையில் நயன்தாரா அது பற்றி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.இதில் தான் கேட்ட உடன் மறுபேச்சு இல்லாமல் உடனே NOC சான்றிதழ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார்.
ஷாருக் கான் தொடங்கி தமிழில் அவர் நடித்த படங்களில் தயாரிப்பாளர்கள் பலரது பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் அவர். தனுஷ் பெயரை அவர் அதில் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் தனுஷ் சண்டை பற்றி நடிகர் ராமராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது எல்லாம் எதுக்கு சார். நடந்துக்குட்டு இருக்கும். நம்ம பாட்டுக்கு வேலையை பாத்துட்டு போவோம். ரோட்டில் போகும்போது இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். கண்டுக்காம போறோம்ல அதுமாதிரி போவோம். அதை பத்தி திருப்பி திருப்பி கேக்காதீங்க என ராமராஜன் கூறி இருக்கிறார். உண்மையில் மக்களாகிய நாமும் இப்படியே இந்த பிரச்சனையை அணுகவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!