Font size:
Print
ரொறன்ரோவில் வசிக்கும் ஒருவர் தனது வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய வேண்டுமாயின் மணித்தியாலத்திற்கு 26 டொலர்களை உழைக்க வேண்டும். ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் ஒன்றாரியோவில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 17.2 டொலர்கள் என அதிகரிக்கப்பட்டது.
இந்த சம்பள அதிகரிப்பானது வாழ்க்கைச் செலவிற்கு ஈடு செய்யக் கூடியது அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழ்வோரின் வாழ்க்கைச் செலவானது தற்போதைய மணித்தியால சம்பளத்தை ஒப்பீடு செய்யும் போது குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ரொறன்ரோவில் வசிக்கும் நபர்களின் வாழ்க்கைச் செலவுஅதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Posts