இன்று வலுவடையும் தாழமுக்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இன்று வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்தியம் நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் நாட்டின் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகொணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. (P)


Related Posts