சும்மாவே இருக்க மாட்டாங்களா? அரசின் அடுத்தடுத்த அப்டேட்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் ஒரு முக்கிய அடையாள ஆவணம் பான் கார்டு. இது வருமான வரி செலுத்துவதற்கும் வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதற்கு ஒரு முக்கிய ஆவணம். ஒரு நபர் அதிகபட்சம் ஒரு பான் கார்டு மட்டும்தான் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை பான் கார்டு 2.0-க்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள பான் கார்டுக்கு பதிலாக qr code உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ள பான் கார்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும் போது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பான் கார்டுகள் அப்டேட் செய்யப்பட்டு அனைவருக்கும் புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts