இன்றைய காலத்தில் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறிய கடை முதல் பெரிய கடை வரை UPI பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு பணத்தை செலுத்துவதற்கு மிகவும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. இருப்பினும் இதில் சிக்கல்களும் உள்ளது. அதாவது சர்வர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பண பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இதுபோன்ற புகார்களை சரி செய்ய முதலில் UPI பிரிவின் கீழுள்ள Dispute Redressal Mechanism என்பதை அழுத்தவும், அதில் Complaint பிரிவின் கீழ் Transaction என்பதை அழுத்தவும். அதன் பிறகு Nature of the transaction என்ன என்பதை தேர்ந்தெடுத்து, Transaction failed but amount debited என்பதை செலக்ட் செய்து, UPI பிரச்சனையின் சுருக்கமான விவரத்தை குறிப்பிடவும், அதன் பிறகு பரிவர்த்தனையின் ஐடி, வங்கியின் பெயர், UPI ஐடி, தொகை, பரிவர்த்தனை தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் UPI பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
Font size:
Print
Related Posts