ரொறன்ரோ பைக் பாதைகளை அகற்ற அனுமதிக்கும் மசோதா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பைக் பாதைகளை அகற்ற அனுமதிக்கும் மசோதாவை ஒன்ராறியோ நிறைவேற்றியது. இது முனிசிபல் பைக் லேன்கள் மீது மாகாணத்திற்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கும். இனி ​​பைக் பாதைகளை நிறுவுவதற்கு நகராட்சிகள் மாகாணத்திடம் அனுமதி கேட்க வேண்டும்.

இந்த மசோதா ரொறன்ரோவில் Bloor Street, Yonge Street மற்றும் University Avenue பகுதியில் உள்ள மூன்று பெரிய பைக் பாதைகளை அகற்ற அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நகர வீதிகளில் பைக் லேன்களை நிறுவுவதற்கான பொதுவான அணுகுமுறையை மேற்கொள்வோம் என போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் கூறினார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பைக் லேன் திட்டங்களையும் மாகாணம் மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

ரொறன்ரோ பாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையானது, சில உள்ளூர் வணிக உரிமையாளர்களின் விவரண ஆதாரங்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் அமைந்ததாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts