புதிய பருவ மாற்றம் தொடர்பில் கனடிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதம வானியல் ஆய்வாளர் கிரிஸ் ஸ்கொட் எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு குளிர் பருவநிலையில் நிலவியதை விடவும் இம்முறை கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் மேற்கு பகுதிகளில் அதிக அளவு குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காலநிலையை எதிர்கொள்ள ரொறன்ரோ பியர்சன் விமான நிலைய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவு போன்ற இயற்கை சீர்கேடுகளின் போது விமான நிலையத்தின் பணிகளை சீராக முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் மிகவும் சன நெரிசல் மிக்க விமான நிலையமாக பியர்சன் விமான நிலையம் கருதப்படுகின்றது.
வாரம் ஒன்றிற்கு சுமார் ஒன்பது லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.