கனடாவில் விசா விதிகளை மீறிய 47,000 வெளிநாட்டு மாணவர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடா அரசின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) 47,175 சர்வதேச மாணவர்களை "இணக்கமற்றவர்கள்" என்று அடையாளம் கண்டுள்ளது. இது வகுப்புகளுக்கு வராமல் விசா விதிகளை மீறியதைக் குறிக்கிறது. 

இதில் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கனடாவின் 2025-2027 குடியேற்ற திட்டத்தின் கீழ், தற்காலிக குடியிருப்பாளர்களை 5% க்கும் குறைவாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 முதல் பாதியில், சர்வதேச மாணவர் வருகைகள் 70% குறைந்து, வெளிநாட்டு வேலை அனுமதிகள் 50% சரிந்தன.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கமிட்டி தலைவர் ஆயிஷா ஜாபர், "கனடாவின் மாணவர் கண்காணிப்பு அமைப்பு மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது" என கவலை தெரிவித்தார். உயர்கல்வி மற்றும் தொழிலாளர் சக்திக்கு வெளிநாட்டு மாணவர்களை நம்பியிருக்கும் கனடாவுக்கு இது பெரும் சவாலாக உள்ளது.

 

Related Posts