கனடாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் பிறக்கும் அனைவருக்கும் தானாகவே குடியுரிமை வழங்கப்படும் தற்போதைய சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, கனடாவில் பிறக்கும் எவரும், அவர்களது பெற்றோரின் குடியுரிமை நிலையைப் பொருட்படுத்தாமல், தானாகவே கனடிய குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், இந்த உரிமை, பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் கனடிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்கும்போது மட்டுமே வழங்கப்பட வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் குடியேற்ற விவகார விமர்சகர் மிசேல் ரெம்பல் கார்னர் தெரிவித்தார்.

இந்த சட்டத் திருத்தத்தை அரசாங்க சட்டமூலத்தில் சேர்க்க வேண்டும் என அவர் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற குழுவில் முன்மொழிந்தார். இருப்பினும், லிபரல் மற்றும் ப்ளொக் க்யூபெக்கோயிஸ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து இந்த முன்மொழிவை நிராகரித்தனர்.

நீதியமைச்சர் சான் ஃப்ரேசர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “பிறப்பால் குடியுரிமை வழங்கும் தற்போதைய சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன்,” என்றார்.

இத்தகைய மாற்றங்கள் புதிய குடியேற்றவாசிகளை குறிவைப்பதாக அமையலாம் என்றும், கனடாவில் குடியேற்ற எதிர்ப்பு மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும் கனடிய குடியுரிமை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.

இந்த விவாதம், கனடாவின் குடியேற்ற மற்றும் குடியுரிமை கொள்கைகள் தொடர்பான அரசியல் கட்சிகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Related Posts
©   Thedipaar

தல–தளபதி சந்திப்பு

©   Thedipaar

யாழில் கொடூர கொலை !