மிசிசாகா பகுதியில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஞாயிறு இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என அறியப்படுகிறது.
விபத்து 6655 விமான நிலைய வீதி மற்றும் ஒர்லாண்டோ டிரைவ் சந்திப்பில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் இடையே ஏற்பட்ட மோதலே இந்த விபத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் கடுமையாக காயமடைந்த இருபது வயதுகளில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், திங்கட்கிழமை காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
