புயலால் பலியான உயிர்கள்! மக்களே உஷார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் தற்போது ‌ மரக்காணம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் சென்னையில் புயல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதேபோன்று மண்ணடி பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதேபோன்று வியாசர்பாடி பகுதியில் இசைவாணி என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது புயல் கரையை கடக்க தொடங்கி விட்டதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts