வடக்கு எடோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த கார் திருட்டு (carjacking) மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். செவ்வாய் காலை 2:26 மணியளவில் ரெக்ஸ்டேல் பவுல்வார்ட் (Rexdale Boulevard) மற்றும் ஹைவே 27 அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையின்படி, தெரியாத நபர்கள் பெட்ரோல் நிலையத்தில் வந்து வாகனத்தைப் பலவந்தமாகப் பறித்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர்கள் எந்தத் திசையில் தப்பிச் சென்றார்கள் என்பதும் தெரியவில்லை.
டொரொன்டோ போலீஸ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
