ஹாமில்ட்டனில் பேருந்து கடத்தல்: பயணிகளிடம் டிக்கெட் வசூலித்து இயக்கிய சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹாமில்ட்டன் நகரில் நிகழ்ந்த விசித்திரமான பேருந்து கடத்தல் சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை கடத்திய நபர், வழக்கமான கடத்தல்போல் ஆபத்தமாக இயக்காமல், முறையாக நிலையங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி, அவர்களிடமிருந்து டிக்கெட் கட்டணமும் வசூலித்ததாகவும் தெரிகிறது. இதனால், பயணிகள் கூட "அவர் சிறப்பாக இயக்கினார்" என்று பாராட்டியுள்ளனர்.

நவம்பர் 11, 2025 அன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில், ஹாமில்ட்டனின் மெக்க்னாப் பேருந்து நிலையத்தில் (McNab Bus Terminal) ஒரு பெரிய அகார்டியன் வகை (மடிச்சு விரியும்) பேருந்து நின்றது. பேருந்து சாரதி தேநீர் அருந்துவதற்காக சிறிது நேரம் இறங்கியதும், திடீரென பேருந்து புறப்பட்டது.

அப்போது பேருந்தில் சுமார் 9-10 பயணிகள் இருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல், ஒரு ஆண் நபர் (30களில் ஒருவர் என தெரிகிறது) சாரதி இடத்தில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். தகவலறிந்த ஹாமில்ட்டன் போலீஸ், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சைரன் அல்லது ஒலி இன்றி அமைதியாக பேருந்தைப் பின்தொடர்ந்தனர்.

வியப்பளிக்கும் வகையில், அந்த நபர் பேருந்தைக் கடத்தி எங்கேயோ தப்பிச் செல்லாமல், வழக்கமான பேருந்து வழித்தடத்தை கடைப்பிடித்தார்! ஒவ்வொரு நிலையத்திலும் பேருந்தை நிறுத்தி, பயணிகளை இறக்கினார். புதிய பயணிகள் ஏற விரும்பினால், அவர்களிடமிருந்து டிக்கெட் கட்டணம் வசூலித்து அவர்களை ஏற்றினார்.

பேருந்து வழி தெரியாததால், சில பயணிகளிடம் வழிசெயல் உதவி கேட்டு, அவர்களின் அறிவுரைப்படி இயக்கியதாகவும் தெரிகிறது. சுமார் 20-30 நிமிடங்கள், 4-5 மைல் தூரம் இப்படி சீராக இயக்கிய பின், பேருந்து ஒரு இடத்தில் நின்றது. அப்போது போலீஸ் அமைதியாக சென்று அந்த நபரை கைது செய்தனர். விபத்துகள் இல்லை, பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பயணிகள் இச்சம்பவத்தை "ஜாய் ரைட்" (மகிழ்ச்சி பயணம்) என்று விவரித்துள்ளனர். ஒரு பயணி கூறுகையில், "அவர் சாலையில் சிறப்பாக இயக்கினார். நாங்கள் பயப்படவில்லை" என்றார். இந்த சம்பவம் கனடாவின் பொது போக்குவரத்து பாதுகாப்பு குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. போலீஸ், சாரதிகளின் ஓய்வு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts