Font size:
Print
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கூடுகின்றது.
10 ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அன்றையதினம் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதி தவிசாளர் தெரிவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியேற்பு என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற்றிருந்தது. (P)
Related Posts