Font size:
Print
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எஸ். எம்.நளீம் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையிலேயே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றது.
அதன்படி, கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்ற நிலையில், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ். எம்.நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். (P)
Related Posts