எரிவாயு விலை திருத்தம் நாளை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் புதன்கிழமை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (P)


Related Posts