Font size:
Print
டாஸ்மாக் கடைகளில் காலியான மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. குடிமகன்கள் மது அருந்திவிட்ட காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் கால்நடைகள் மட்டும் இல்லாமல் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி மது பாட்டில்களை மது கடைகளிலேயே திரும்ப பெற டாஸ்மாக் முடிவு செய்தது. அதன்படி மது பாட்டில் விற்கப்படும் போது கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த பாட்டில்களை திரும்ப வழங்கியதும் பத்து ரூபாய் திரும்ப கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
Related Posts