இஸ்ரேல் யுத்ததால் பாதிக்கப்பட்ட 27 பேர் நாடு திரும்பினர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


மத்திய கிழக்கில் லெபனான்-இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள்,    கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (04) வந்தடைந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் 05 சிறு பிள்ளைகள், 03 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் அடங்குவர்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, லெபனானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இவ்வாறே கடந்த 11/06, 11/12, 11/28, 12/01 ஆகிய திகதிகளில் இலங்கையர்கள் குழுவொன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி லெபனானில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 இந்த 27 இலங்கையர்களும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் துபாயிலிருந்து புதன்கிழமை (04) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். (P)

உலக அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழ் பெண் | Thedipaar News

Related Posts