பாராளுமன்றத்தில் வரலாற்று உரை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் மாற்று திறனாளியான முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (06) உரையாற்றினார். இவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளி ஒருவர் இலங்கை பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (P)


Related Posts