ரயிலில் நடந்த விபரீதம்! இருக்கைக்காக கொ*லையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி சென்ற ரயிலில் தவுகித் (24) என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கும், கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே இருக்கைகாக வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் அவரை தாக்கினர். அதன் பிறகு சரிந்து விழுந்த தவுகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ*யிரிழந்தார். இ*றப்புக்கு முன், அவர் தனக்கு நேர்ந்த நிலையை குறித்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவரது சகோதரர்கள் ரயில்வே நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் வந்ததும் அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த கா*யம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குற்றவாளிகளை ரயில்வே நிலையத்தில் கைது செய்தனர்.

Related Posts