இலங்கையில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் வீழ்ச்சி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தி நிறுவனங்களின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் இந்த நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது உள்நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக உப்பை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உப்பு நிறுவனங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் உள்ள உப்பு இருப்பு மற்றும் நுகர்வுக்கு தேவையான அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின், இறக்குமதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உப்பை இறக்குமதி செய்வது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  (P)


Related Posts