இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் சன்வாலியா சேத் என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பலரும் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணமாகவோ அல்லது நகைகளாகவோ காணிக்கை செலுத்தியுள்ளனர். சமீபத்தில் இந்த கோயிலின் உண்டியல் நிரம்பியுள்ளதால் கோவில் தேவஸ்தானத்தால் உண்டியல் திறக்கப்பட்டது.
மேலும் அதிலுள்ள பணம், நகைகள் கணக்கீடும் பணி தொடங்கியது. இதில் கோவில் உண்டியலில் ஏராளமான பக்தர்கள் சின்ன சின்ன வடிவிலான தங்க பிஸ்கட்டுகள், சின்ன சின்ன வெள்ளியால் ஆன பொருட்கள் பலவற்றையும் காணிக்கையாக செலுத்திஉள்ளனர். அப்போது 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட் மற்றும் ரூ. 23 கோடி ரொக்க பணம், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி, கை விலங்கு ஆகியவை இருந்துள்ளது தெரிய வந்தது. இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts