லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், நுவரெலியா கிங்ஸ், கெண்டி போல்ட்ஸ், கோல் மார்வல்ஸ், கொழும்பு ஜகுவார், ஹம்பாந்தோட்ட பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.
தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஜஃப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்ட பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் முதலாவது போட்டி இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜகுவார் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மாலை 6.15 அளவிலும் கெண்டி போல்ட்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இரவு 8.30 அளவிலும் ஆரம்பமாகவுள்ளன.
ஒரு இன்னிங்ஸுக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் 25 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த தொடரில் ஷகிப் அல் ஹசன், அலெக்ஸ் ஹல்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், இப்திகார் அஹமட், கரீம் ஜேனட், சௌமியா சர்க்கார், இமாத் வாஷிம், மொஹமட் ஹமீர், கைல் மில்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். (P)