கொழும்பு துறைமுக திட்டத்திற்காக ஐடிஎஃப்சி நிறுவனத்திடம் அதானி நிறுவனம் முன்வைத்த 553 மில்லியன் டொலர் கடன் கோரிக்கையை மீளப்பெற முடிவுசெய்துள்ளது.
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் அதானியின் வளர்ச்சிக்காக உள் நிதியை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மேற்கு சர்வதேச முனையத் திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த முடிவை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இந்திய பில்லியனர் கௌதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள அதானி குழுமம், துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் 51% பங்குகளை வைத்துள்ளது, இதில் சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கோ லிமிடெட் நடத்தும் முனையமும் அடங்கும்.
இலங்கையின் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், முனையத்தின் 34% பங்குகளை வைத்துள்ளதுடன், அரசாங்கத்தால் நடத்தப்படும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு எஞ்சிய பங்குகள் உள்ளன.
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் (CWIT) மேம்பாடு, கட்டுமானம் மற்றும் இயக்கத்திற்கு ஆதரவாக 553 மில்லியன் டாலர் கடனை வழங்க கடந்த ஆண்டு நவம்பரில் யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)