மர்மக் காய்ச்சல்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. (P)


Related Posts