ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வியாழக்கிழமை (12) பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் மத்தியம் பண்டாரவை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி சாமரி வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியான.நிசாம் காரியப்பரை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு பெயரிடாமல் தேசியப் பட்டியல் தயாரிப்பதைத் தடுத்து மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். (P)