Font size:
Print
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கம் என்றும் இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி விரைவாக நிறைந்து வரும் நிலையில் தற்போது திருவள்ளூரில் உள்ள பூண்டிஏரி முழு கொள்ளளவை அடைந்து விட்டது. பூண்டி ஏரி நிரம்பி வரும் நிலையில் இன்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Posts