கேரள மாநிலத்தில் வசித்து வந்தவர் வினித், இவர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வினித் கடந்த 45 நாட்களாக விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளிடம் பலமுறை அனுமதி கேட்டு வந்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காமல் கண்டிப்பாக நடந்து கொண்டதால் வினித் மிக மன வேதனைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ நாளன்று ஆயுதப் படையில் துப்பாக்கிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த வினீத் திடீரென ஏகே 47 என்ற துப்பாக்கியை தனது தலையை நோக்கி சுட்டு தற்கொ*லை செய்துள்ளார். பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்த காவல்துறையினர் சத்தம் கேட்டு விரைந்து வந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இ*றந்து விட்டதாக தெரிவித்தார். விடுமுறை கிடைக்காமல் காவல்துறை பணியாளர் தற்கொ*லை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம் | Thedipaar News