கஞ்சா சாரதி கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தியில் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுச் சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.


பேருந்து சாரதிகளில் ஒருவர் மீது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சாரதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts