கனடாவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டொராண்டோவின் ரெக்ஸ்டேல் பகுதியில் உள்ள வுட்பின் வணிக வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ரெக்ஸ்டேல் மற்றும் ஹைவே 17 சந்திப்பிற்கு அருகிலுள்ள இந்த வணிக வளாகத்தில் பிற்பகல் 3:31 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை அளிக்கப்பட்டும் குறுகிய நேரத்தில் உயிரிழந்ததாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்களில், முன்கண்ணாடி மற்றும் ஓட்டுநர் பக்க ஜன்னலில் துப்பாக்கி குண்டு துளைகள் காணப்படுகின்றன. ஓட்டுநர் பக்க கண்ணாடி சிதறியிருந்தது.

சந்தேகநபர் அல்லது சந்தேகநபர்கள் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்த விவரங்களைத் திரட்டி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு ஏற்பட காரணமான சூழ்நிலைகள் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Posts