பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ; சாகவே இல்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலியல் வழக்குகளில் சிக்கிய அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக அவரது நெருங்கிய முன்னாள் காதலி கூறியுள்ள தகவல் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மற்றும் நீதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால் அவரது மரணத்தில் தொடக்கம் முதலே மர்மம் இருப்பதாகப் பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக அவரது முன்னாள் காதலி கூறியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அவர் அளித்த பேட்டியில், ‘ஜெப்ரி எப்ஸ்டீன் இறந்துவிட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை, அவர் தற்போது இஸ்ரேல் நாட்டில் பதுங்கியிருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களில், சிறையில் ஒரு வாகனத்தின் மூலம் பிணங்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலை இதற்கு ஆதாரமாக உள்ளது’ என்றார்.

இஸ்ரேல் தலைநகரில் எப்ஸ்டீன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

Related Posts