இரவு வேளையில் கடமையில் இருக்கும் போது சிவப்பு விளக்குக்கு பொலிஸாருக்கு அனுமதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸார், இரவு வேளையில் கடமையில் இருக்கும் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இரவு வேளைகளில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸார், வாகனங்களை நிறுத்துவதற்கான சமிக்ஞையை செய்யும் போது, பெரும்பாலான நேரங்களில், மின் விளக்குகளை ஒளிரவிடுகின்றனர். அந்த வெளிச்சம் சாரதியின் முகத்தில் படுவதன் காரணமாக, சிலவேளைகளில் வாகனத்தை நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, 

அத்துடன் விபத்து ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் உள்ளது. ஒளி பட்டுத்தெறிக்கும் போது அவதானிக்கும் வகையில் ஜெக்கட் அணிந்திராமையால், அதிகாரிகளும் விபத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம், சாரதிகள் ​அசௌகரியங்களுக்கு உட்படுத்தாத வகையில் ஒளி சமிக்ஞை செய்வது, அத்துடன், அவதானிக்கும் வகையில் ஒளி பட்டுத்தெறிக்கும் ஜெக்கட் அணிந்திருத்தல், பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கை பயன்படுத்தல் முக்கியமானது என குறிப்பிப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இரவு வேளையில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து பொலிஸாரை அவ்வப்போது கண்காணிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  (P)


Related Posts