புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகம் அடையாளம் காணும் செயலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க ReportIn என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தையும் இருப்பிடத் தரவையும் பயன்படுத்தி, அவர்களின் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த செயலி சிறையில் அடைப்பதற்கான மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் ஒரு குடிவரவு வழக்கு நிலுவையில் இருக்கும் நபர்கள் தங்கள் நிலையை எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எளிதில் தெரிவிக்க முடியும். இதுவரை 40 பேர் இந்த செயலியில் தன்னார்வத்துடன் சேர்ந்துள்ளனர்.

இந்த செயலியை உருவாக்க 3.8 மில்லியன் கனேடிய டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது, மேலும் 270 அதிகாரிகள் இதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் | Thedipaar News

Related Posts