கல்கிசையில் ரஷ்யா துப்பாக்கி கைப்பற்றல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில்  ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள்,  10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு தங்க மோதிரம் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் கார்களுக்கான 18 போலி தகடுகள், மோட்டார் சைக்கிள்களுக்கான 8 தகடுகள், முச்சக்கரவண்டிகளுக்கான 4 தகடுகளும் அடங்கும்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரிடமிருந்தே இந்த ஆயுதங்கள் குறித்த பெண்ணுக்குக் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையா அல்லது திருடப்பட்டவையா என்பது தொடர்பில் கல்கிஸ்ஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts